Skip to main content

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் காலமானார்!!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

தொன்மையும் பழமையும் கொண்ட பிரசித்தி பெற்ற சைவமடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தின் மடாதிபதி வயோதிக காரணமாக இயற்கை எய்தியிருப்பது ஆன்மீக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Mayiladuthurai Dharmapuram Adheenam passed away


நாகை மாவட்டம் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள தருமபுரத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த தருமை ஆதீனம். அந்த ஆதீனத்தின் 26 வது குருமகா சன்னிதானமாக இருந்துவத்தார் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். அவர் இன்று பிற்பகல் வயோதிகத்தால் இயற்கை எய்தியிருக்கிறார். 93 வயதான அவர்,  கடந்த சில தினங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். வயோதிகத்தால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை இறந்திருக்கிறார்.

 

Mayiladuthurai Dharmapuram Adheenam passed away


1926 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர். விருதாச்சலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தர்மபுரத்தில் வித்வான் பட்டம் பெற்றார். அதோடு அங்கேயே கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றிவந்தார். தேவஸ்தானத்தில் அதிகநாட்களில் பணியாற்றியவரை கட்டளை தம்பிரான் சுவாமிகளாக நியமித்தனர். அன்று முதல் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான்களில் ஒருவராக பணி செய்துவந்தவரை 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்திற்கு இருபத்தாறாவது மடாதிபதியாக பொறுப்பேற்க செய்தனர்.

 

Mayiladuthurai Dharmapuram Adheenam passed away


49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்து, ஆதீனம் அதனை சுற்றியுள்ள சொத்துக்கள், கல்லூரிகளை நிர்வகித்துவந்தவர். வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

காசி வரை சொத்துக்களைக் கொண்டிருக்கும் தருமபுரம் ஆதீனத்திற்கு திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில், திருநள்ளாறு , உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் இருக்கின்றன. அதன்மூலம் கோடி கோடியாக வரும் வருமானத்தையும், அதன் சொத்துக்களையும் திறம்படவே நிர்வாகித்துவத்தார். ஏற்கனவே இரண்டுமுறை உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மடத்திற்கு வந்து ஆன்மீகப் பணியில் இருந்துவந்தார்.  

 

Mayiladuthurai Dharmapuram Adheenam passed away


இதற்கிடையில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்ட ஆதீனம், கட்டளை தம்பிரானாக தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு மடத்தில் இருந்த ஹீலஹீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவமாகிகளை 2017 பிப்ரவரி மாதம் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்து அனைத்து பூஜைகளையும் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.