தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகிறது என்ற அரசாணையை, இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மயிலாடுதுறையை தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் ‘தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகிறது’ என்ற அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையரே கரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பார் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.