Skip to main content

’மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்’ -வெடிக்கும் போராட்டம்

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

 

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை தற்போது போராட்டமாக மாறியிருக்கிறது.

m

 வர்த்தக சங்கங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை  பதிவு செய்துவருகின்றனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வீதிக்கு வந்துள்ளனர்.  ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், சமுக ஆர்வளர்கள் என பலரும் அவரவர்கள் தங்களின் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் பதிவு செய்துவருகின்றனர்.

 

தமிழகத்திலேயே பெரிய மாவட்டங்களுல் ஒன்று நாகை. கொள்ளிடத்தில் துவங்கி கோடியக்கரை வரையில் நீண்டு, திருக்குவளை வரை அகண்டுக்கிடக்கிறது. ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டமாக இருந்து 1991ம் ஆண்டு நாகை மாவட்டம் உதயமாகும் போது மயிலாடுதுறை உட்கோட்டத்தையும் உள்ளடக்கியே அமைத்தனர். அப்போதே மயிலாடுதுறையை தனிமாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு பல கட்ட போராடங்களும் நடந்தது. இன்றுவரை அந்த போராட்டம் ஏதோ ஒருவடிவத்தில், ஏதாவது ஒரு அமைப்புகள் முன்வைத்து போராட்டம் நடத்திக்கோண்டே இருக்கின்றனர்.

 

நாகை மாவட்டத்தில் உள்ள பெரிய வருவாய் கோட்டம் மயிலாடுதுறை. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளையும், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி, ஆகிய நான்கு வட்டங்களையும், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகளையும், மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம், ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களையும், உள்ளடக்கி ஒன்பது லட்சம் மக்களை கொண்டுள்ளது. 

 

m

மயிலாடுதுறை தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்பது கடந்த பல தேர்தல்களில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் அறிக்கைகளாக முன்வைத்து வாக்குவேட்டையில் ஈடுபட்டு வெற்றிபெற்றுள்ளனர். மயிலாடுதுறை முன்னாள் எம்,எல்,ஏ பால,அருட்செல்வன் சட்டமன்றத்தில் பலமுறை இதுகுறித்து பேசியதோடு அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடமும் முறையிட்டுள்ளார். அதோடு இரண்டு முறை உண்ணாவிரதம் செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். விரைவில் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுவந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கும்பகோணம் புதிய மாவட்டமாக போகிறது, மயிலாடுதுறையை திருவாரூரோடு இனைக்கப்பட போகிறது ஏன செய்தி பரவியது. இது குறித்து சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை எம்,எல்,ஏக்களோ மயிலாடுதுறை புதிய மாவட்டமாக இப்போது வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை, கும்பகோணம் மாவட்டம் ஆனால் வரவேற்போம் என கேட்பவர்களிடமெல்லாம் கூறியிருக்கின்றனர்.

 

இந்த நிலையில் நேற்று 18 ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆர்,பி, உதயகுமார் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வந்துள்ளதாகவும், விரைவில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட வாய்ப்புள்ளது." என்றும் கூறியுள்ளார். இதை கேட்ட மயிலாடுதுறை கோட்டத்தைச்சேரந்த மக்கள் கொதித்துப் போய் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவிரி குழுமத்தைச்சேரந்த வழக்கறிஞர் சிவச் சந்திரனிடம் விசாரித்தோம்," இன்று, நேற்று அல்ல முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். ஏன் தனி மாவட்டமாக மயிலாடுதுறை ஆக வேண்டும் என்பதற்கான விளக் கங்களையும் கொடுத்துள்ளோம். நாகை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் மகேந்திரப்பள்ளி காட்டூர், கொள்ளிடம்

 

உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாகை மாவட்ட ஆட்சியரகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் காரைக்கால் என்கிற தனி மாநிலத்தையும், திருவாரூர் என்கிற அடுத்த மாவட்டத்தையும் கடந்து போக வேண்டிய நிலையே இருக்கிறது. அதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வர ஒரு நாள் ஆகிவிடும். மயிலாடுதுறையில் அனைத்து வசதிகளும் இருந்தும் தனி மாவட்டம் ஆக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ள அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் ஆகும் பொழுது மயிலாடுதுறை ஏன் மாவட்டமாக்க மறுக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது. கும்பகோணத்தை மாவட்டம் ஆக்கி அதில் இணைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை அல்ல மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே. இல்லையென்றால் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம். தனிமாவட்டம் கிடைக்கும் வரை போராடுவோம்." என்றார் உறுதியாக.

 

 மயிலாடுதுறை சமூக ஆர்வலர்களுல் ஒருவரான அ.அப்பர் சுந்தரம் கூறுகையில்," மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை நீண்ட காலமாக உள்ள நிலையில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு, கும்பகோணம் மாவட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது மயிலாடுதுறை மக்களின் மனநிலையை மெல்ல மெல்ல மாற்றுவதற்கான அல்லது  அக்கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதற்காக முயற்சியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  இப்பகுதியின் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து மயிலாடுதுறை புதிய மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும்." .


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.