Skip to main content

ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்-உறுதியாய் நின்ற அபிநந்தன்

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட வீடியோ இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அபிநந்தன் தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதனை அடுத்து வெளியான வீடியோவில் ரத்த காயத்துடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் காட்சிகள் வெளியானது. 

 

அதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், அவர் தேநீர் அருந்தி கொண்டு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

 

 Maybe I will not change my answer if I return to India

 

அந்த வீடியோவில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானியிடம் பாகிஸ்தான் இராணுவ மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.

கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ? 

பதில் :wing Commander அபினந்தன்.

கேள்வி : நாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி சொன்னார்.

 

பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்.பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர்.அவர்களுக்கும் என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும் என்றார்.

கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

பதில் : என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும்.ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன்.தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன் என்று கூறினார் நமது வீரர்.

கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ? 

பதில் : ஆம் sir ஆகி விட்டது.

கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.

கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ? 

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.

கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ? 

பதில் : sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

போர் விமானத்தில் பறந்த மோடி

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 Modi flew in a fighter jet

 

பிரதமர் மோடி போர்  விமானத்தில் பயணித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்திய போர் படையில் இருக்கும் தேஜஸ் எனும் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். விமான போர் படையின் சீருடை அணிந்தபடி ஜெட்டில் ஏறிய பிரதமர் மோடி, கையசைத்தபடி உற்சாகமாக பயணம் செய்யும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த பயணம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது' என தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

nn

 

கேரளாவில் சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சோதனையின் அடிப்படையில் மீண்டும் கேரள மாநிலத்தில் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மலப்புரம், எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னாள் நிர்வாகி ஜமால் முகமது, லத்தீப் உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த பிறகும் அதன் நிர்வாகிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வருவதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில் வங்கி கணக்குகள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.