Skip to main content

“நீங்களும் அவங்களும் நல்லா இருக்கணும்...” - அமைச்சர் தா.மோ. அன்பரசன் 

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

“May you and they be well; If anything gets complicated, we are there" - Minister Tha.Mo. Anbarasan

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், விவசாயிகள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “உணவுப் பொருளில் நஞ்சு கலந்து விஷம் கலந்து கொடுத்தால் எந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இந்நிலையை எதிர்காலத்தில் யாரும் கடைப்பிடிக்கக் கூடாது. தரமான ஜவ்வரிசியைத் தயார் செய்ய வேண்டும். நீங்களும் நல்லா இருக்கனும். விவசாயிகளும் நல்லா இருக்கனும். அந்த நிலையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதில் சிக்கல் இல்லை ஏதும் பிரச்சனை என்றால் அதை நாங்கள் சரி செய்யத் தயாராக உள்ளோம்” எனக் கூறினார். 

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தா.மோ. அன்பரசன், “நிறுவனத்தின் சார்பில் ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் காலங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நெடுநாளாக இந்தக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் பேரில் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் அனைத்துத் தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

“என்னை வெற்றிபெறச் செய்தால் மக்களின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலிப்பேன்” - அருண் நேரு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதி கொசூர் கடைவீதியில்  பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கினார்.

பிரச்சாரத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், “கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. நிச்சயமாக இந்த பகுதியினுடைய குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். எனவே திமுக வேட்பாளர் அருணுக்கு வாக்களியுங்கள் என்றார்”. அதைத் தொடர்ந்து வேட்பாளர் அருண் நேரு உற்சாகமாகத் தனது பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கி, மத்தகிரி, தொண்டமாங்கினம், போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பாக்கப்பட்டி, பஞ்சப்பட்டி ஊராட்சி காகம்பட்டியில் தனது பிரச்சாரத்தை முடித்தார்.

Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

முன்னதாக 16 இடங்களில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது:- கழகத்தின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணிலடங்கா சாதனைகளை செய்திருக்கிறார். உங்களின் உற்சாக வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை போன்ற இளைஞர்களை வெற்றி பெறச் செய்தால் இந்த பகுதி மக்களுடைய குரலாக இருந்து பாராளுமன்றத்தில் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  பாடுபடுவேன். மேலும்,  கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதனை அவர் நிறைவேற்றுவார்.

பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றுவேன்” என்றார்.

பிரச்சாரத்தின் போது குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டக் குழு துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை ஒன்றியச் செயலாளர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இல. கரிகாலன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.