தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஷவ்வால் பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று தென்படாததால் ரம்ஜான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும்' என தெரிவித்துள்ளார்.
அரபு நாட்டில் பிறை பார்க்கும் குழு பிறையைப் பார்த்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட பின்னரே ரமலான் மாதத்தின் தொடக்கம் மற்றும் முடிவின் சரியான தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அரபு நாடுகளில் கடந்த மாதங்களில் இரண்டாம் தேதி நோன்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.