ரஷ்யாவை கண்டித்து மே17 இயக்கம் போராட்டம்! 

May 17 struggle against Russia!

உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை கண்டித்தும், அமெரிக்க தலைமையிலான நேட்டோவை கலைக்கக் கோரியும் மே17 இயக்கம் சார்பில் இன்று சென்னையில் போராட்ட ஒன்று கூடல் நடைப்பெற்றது. அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் போருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வைத்திருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மு.வீரபாண்டியன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு, மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுக நயினார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இதில் மஜக பொதுச் செயலாளருடன் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Russia Ukraine
இதையும் படியுங்கள்
Subscribe