சட்டத்தை மதிக்காத பாஜகவினரை கைது செய்வதில்லை–திருமுருகன்காந்தி குற்றச்சாட்டு

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. மனித உரிமைக்கு எதிராக தமிழகரசு செயல்படுவதையும், பொதுமக்களை பாதிக்கும் அரசின் திட்டங்களை, செயல்பாடுகளை எதிர்த்தும் குரல் கொடுத்தும் போராடியும் வரும் திருமுருகன்காந்தி, ஐ.நா வின் மாநாடுகளில் கலந்துக்கொண்டு இந்தியாவின் பொய் முகத்தை அங்கு தோலுரித்துவருகிறார். இதனால் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பல நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

thirumuru

இதனால் அவரை முடக்க திட்டமிட்ட மத்திய – மாநில புலனாய்வுத்துறைகள் திருமுருகன் மீது வழக்குகளாக பதிவு செய்துவந்தன. ஓரு மாதத்துக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து விமானம் வழியாக பெங்களுரூவில் வந்து இறங்கியவரை பெங்களுரூ போலிஸார் கைது செய்து தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை போலிஸார் பழைய புகார்களை தூசு தட்டி எடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தினார். நீதிபதி ரிமாண்ட் செய்ய மறுத்து ஜாமீனில் விடுதலை செய்து அனுப்பினார். நீதிபதி வீட்டை விட்டு வெளியே வந்தவரை வேறு ஒரு வழக்கில் கைது சென்னை புழல் சிறையில் செய்து சிறையில் அடைத்தனர்.

அங்கிருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றினர். சில தினங்களுக்கு முன்பு சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன்காந்தியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரியான உணவு உண்ணாமை, ரத்தத்தில் பொட்டாச்சியம் அதிகம்மிருந்தது போன்றவை தான் அவர் உடல் நலம் கெடுவதற்கு காரணம் என கண்டறிந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கடந்த 3 நாட்களாக சிகிச்சையளித்து வந்தனர்.

உடல் ஓரளவு சீரடைந்ததும் அக்டோபர் 2ந்தேதி அவரை மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றினர். அதே நேரத்தில் திருமுருகன்காந்தி மீது போடப்பட்டுயிருந்த 24 வழக்குகளில் இருந்தும் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. அதனை தொடர்ந்து அக்டோபர் 2ந்தேதி மாலை 4 மணிக்கு வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 55 நாள் சிறைவாசத்துக்கு பின் பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தியை மே 18 அமைப்பின் தோழர்கள் மாலை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

thirumurugan

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன்காந்தி, என் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்து என்னை சிறையிலேயே வைத்திருக்க உத்தரவிட்டது மத்தியில் ஆளும் மோடி அரசு. அதனை தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசு கடைப்பிடித்தது. அது இனியும் செய்யும். தமிழகத்தில் சுத்தமாக கருத்து சுதந்திரத்துக்கு இடமில்லை. அரசுகளை எதிர்த்து ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலே வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். அரசு சாசனத்துக்கு விரோதமான அரசுகள் செயல்படுகிறது. சட்டத்தை துச்சமாக மதித்து செயல்படும் பாஜகவினர் இங்கு கைது செய்யப்படுவதில்லை. ஆனால் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்து பேசும் என்னைப்போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாக பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது. அப்படித்தான் என்மீத 24 பொய் வழக்குகள் பதிவு செய்து வைத்துள்ளன என்றார்.

சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தி சென்னை செல்லும் வழியில் வேலூர் மாநகரில் உள்ள பெரியார் சிலைக்கு திருமுருகன்காந்தி மாலை அணிவித்தார்.

may17 released thirumurugan gandhi
இதையும் படியுங்கள்
Subscribe