கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி தலித் பெண் தலைவரை ஊராட்சிகூட்டங்களில் தரையில் அமர வைத்தும், அவரை கொடி ஏற்றவிடாமல் தடுத்தும்அவமரியாதை செய்த சம்பவம்வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை உண்டாகியது.
இந்நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குழந்தை அரசன், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன், தமிழ் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் உள்ளிட்டோர்நேரில் சென்று, அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் தெரிவித்தனர்.மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் இயக்கத்தின் சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இருப்பதாகஊராட்சித் தலைவர் மகேஸ்வரி சரவணகுமாருக்கு நம்பிக்கைகூறினார்கள்.