Skip to main content

சாஸ்திரி பவன் அலுவலகம் மீது தாக்குதல்: மே 17 இயக்கத்தினர் கைது

Published on 02/04/2018 | Edited on 02/04/2018


 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் சாஸ்திரி பவன் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் (படங்கள்)

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (08.04.2023) சென்னை வருவதையொட்டி மே 17 இயக்கம் சார்பில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று (28.02.2023) காலை 10 மணிக்கு, மே பதினேழு இயக்கம் சார்பில் தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து இலங்கை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

 

இந்நிகழ்வானது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்றது.  ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு, “தமிழர்களே, நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம். தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய், நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்,  தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு” என முழக்கங்களை எழுப்பினர்.