காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் சாஸ்திரி பவன் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.