காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதேபோல், மே 17 இயக்கமும் போராட்டம் அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 02 ஏப்ரல் 2018, திங்கள் காலை 10 30 மணியளவில் மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என்று மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.