Skip to main content

கரோனா தடுப்புப் பணியாளர்களுக்குப் 'பிரியாணி விருந்து' வைத்து அசத்திய சமூக ஆர்வலர்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

may 1 labour day nagai district briyani workers


உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை அழைத்து பிரியாணி விருந்து வைத்துள்ள சமூக ஆர்வலரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கரோனா காரணமாக உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினத்தை தொழிலாளர்கள் மிக எளிமையாகக் கொண்டாடினர். இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் தொழிலாளர் தின வாழ்த்துகளை எளிமையாகப் பகிர்ந்து வருகின்றனர். 
 

may 1 labour day nagai district briyani workers


இந்த நிலையில் துபாய் நாட்டில் வசித்து வரும் நாகூரைச் சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளரும், சமூக ஆர்வலருமான ஷேக்தாவூத் மரைக்காயர் என்பவர் உழைப்பாளர் தினத்தில் நாகையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்குச் சிக்கன் பிரியாணி விருந்து வைக்க முடிவெடுத்தார். பின்பு இது குறித்து நண்பர்களிடம் ஆலோசித்த ஷேக்தாவூத், நண்பர்களின் உதவியுடன் துபாயில் இருந்தவாறே ஏற்பாடுகளைச் செய்து சிக்கன் பிரியாணி விருந்து வைத்து முடித்துள்ளார். 
 

may 1 labour day nagai district briyani workers

 

http://onelink.to/nknapp


தனியார் பள்ளியில் நேற்று (01/05/2020) நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் நாகை நகராட்சி ஆணையர் யேசுராஜ் பிரியாணியைத் துப்புரவு பணியாளர்களுக்கு பரிமாறி அனைவரையும் மகிழ்ச்சி பொங்கவைத்தார். அனைவரும் பிரியாணியைச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த விருந்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து உணவு அருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருந்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கூறுகையில், "சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு வாய்க்கு ருசியா, மனசுக்கு நிறைவா சாப்பிட்டிருக்கோம். கரோனா எப்போ ஒழியும், எப்போ நிம்மதி வருமோ தெரியல" என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'5 பைசா ஆஃபர் பிரியாணி'-மக்கள் திரண்டதால் ஷட்டரை மூடிய கடைக்காரர் 

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 '5 paisa offer biryani'-shopkeeper closes shutters as crowd gathers

பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஆனால் தற்பொழுதெல்லாம் இதைவிட மேலும் நூதனமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பிரியாணி கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூரில் 'திண்டுக்கல் பிரியாணி' என்ற புது பிரியாணி கடை திறக்கப்பட்டது. அறிமுக நாள் சலுகையாக ஒரு பைசா, 5 பைசா, பத்து பைசா உள்ளிட்ட செல்லாத நாணயங்களை கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டது.

செல்லாத காசுகள் மக்களிடம் இல்லாமல் இருக்கலாம் என கடை நிர்வாகம் நினைத்ததோ என்னவோ இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த நாள் காலையிலேயே செல்லாத ஐந்து பைசா, பத்து பைசா காசுகளுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த வரவேற்பை எதிர்பாராத பிரியாணி கடையினர் மக்கள் கூட்டத்தை கண்டதும் 50 பேருக்கு மட்டும் பிரியாணி டோக்கனை கொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கடையின் ஷட்டரை  மூடிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பிரியாணிக்கு காசா? - ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கிய கும்பல்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
After eating biryani, the gang beaten the hotel owner after refusing to pay

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில்  நேற்று மதியம்  மது போதையில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். பின்னர் பணம் தராமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் அந்த கும்பலிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உரிமையாளரைத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அந்த கும்பலைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்நிலையில் இரவு நேரத்தில் ஈரோடு மரப்பாலம் பகுதியில் அந்த 4 பேர் கொண்ட கும்பல் சுற்றித் திரிந்துள்ளது. இவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட பொதுமக்கள் அந்த கும்பலை தர்ம அடி கொடுத்து பிடித்தனர். 

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்த இருவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், புவனேஸ்வரன் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் ஓட்டலில் தகராற்றில் ஈடுபட்டு தலைமறைவான சூர்யா மற்றும் மாதேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஈரோடு ஓட்டலில் மதுப் பிரியர்கள் தகராற்றில் ஈடுபட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது.