Maximum rainfall in Arani!

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பொழிந்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, தி-நகர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, போரூர், ராமாபுரம், விருகம்பாக்கம்,கோடம்பாக்கம்,அசோக் நகர், வடபழனி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல் நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், திருவிக நகர், சூளைமேடு ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்தது.

சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், செங்குன்றத்தில் மழை பொழிந்தது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர்,பெருங்களத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர், பல்லாவரம் பபகுதிகளில் மழை பொழிந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் விழுப்புரம்,காஞ்சிபுரம்,திருவெண்ணெய்நல்லூர்,திருக்கோவிலூர், முகையூர், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலூர், மைலத்தில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், சென்னை மீனம்பாக்கம் நுங்கம்பாக்கத்தில் தலா 3 சென்டிமீட்டர் மழையும், மேற்கு தாம்பரத்தில் 4.7 சென்டி மீட்டர் மழையும், தரமணியில் 2.9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடியில் கனமழை காரணமாக பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா கட்டிய தடுப்பணையைத் தாண்டி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கனமழை காரணமாக திம்மாப்பேட்டை நாராயணபுரம் பகுதியில் உள்ள கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.