Advertisment

தூத்துக்குடியிலும் மாவுக்கட்டு... தொடர் கொலை சம்பவத்திற்கு புல் ஸ்டாப்! 

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் விவேக் வயது 37, இவரும் அங்குள்ள சிவந்தகுலம் பகுதியை சேர்ந்தமுருகேசன் வயது 35 இருவரும் நண்பர்கள்.15 ஆம் தேதிமாலை 5 மணிக்கு மேல் இருவரும் இருசக்கர வாகனத்தில் காமராஜ் கல்லூரியின் சாலை அருகே சென்றபோதுடூவீலர்களில் அவர்களை வழிமறித்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியது.

Advertisment

 Mavukattu in Thoothukudi..  Bull Stop for the serial incident

அண்மையில் தூத்துக்குடியில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில்தூத்துக்குடி டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலனின் நேரடி கண்காணிப்பில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. மரணமடைந்த இருவரும் சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் வேகமாக சென்றவர்களை கண்டித்ததில் ஏற்பட்டவாக்குவாதம் முற்றி விரோதமாக மாறி கொலையில் முடிந்திருக்கிறது இந்த சம்பவம்.

Advertisment

 Mavukattu in Thoothukudi..  Bull Stop for the serial incident

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொலை குற்றவாளிகள் இருந்த இடத்தை கண்டறிந்து சுற்றிவளைத்து 5 பேரை கைது செய்துள்ளனர்.ஆனால் வழக்கம்போல கைது செய்யப்பட்டவர்களின் கை, கால் உடைந்துமாவுக்கட்டுடனான புகைப்படங்கள் வெளியானது. தாங்கள்சுற்றிவளைத்ததை சுதாரித்துக்கொண்ட அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பமுயன்றபோது இருசக்கர வாகனம் சறுக்கி கீழே விழுந்தனர். வழுக்கி விழுந்த மாரிமுத்து, அருண், மாரிச்செல்வம் ஆகிய மூன்று பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை மீட்டுமருத்துவமனையில் சேர்த்து கை, கால்களில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்தோம் என போலீசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 Mavukattu in Thoothukudi..  Bull Stop for the serial incident

கைது செய்யப்பட்ட 5 பேரில் மூன்று பேருக்குத்தான் மாவு கை, கால் முறிந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. அந்த மூன்று பேரும்தான் அந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகஅரிவாளை கைகளில் ஏந்தியவர்கள்என்பதுதான் இங்கு ஹைலைட்.

crime police murder tutucorin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe