/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamal sridevi_1.jpg)
நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்றபோது சனிக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகை ஸ்ரீதேவியின் திறமைக்கு அவரது இளம் வயது நடிப்பே சாட்சி. குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக மாறியதை பார்த்தவன் நான். மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள் வந்து செல்கின்றன என தெரிவித்துள்ளார்.
1976-ம் ஆண்டு பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படம் மூலம் தனது 13வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி. இதில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியுடன் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்வார். தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார்.
Follow Us