The matter of  death student; Published medical board report

Advertisment

காரைக்காலில் தனது மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவரின் குடும்பத்தார், குற்றவாளியைக் கைது செய்தாலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிரிழந்ததாக போராட்டம் நடத்தினர்.

பல்வேறு அமைப்புகளும் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் புதுச்சேரி அரசு மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை அமைத்து சிறுவன் மரணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஆணையிட்டது.

மேலும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு நேற்று காலை தங்களது அறிக்கையை மருத்துவத்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உரிய அறிக்கை இயக்குநர் சார்பில் இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் மாணவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக விசாரணை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளதாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டை சில தினங்கள் முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.