Advertisment

‘பிக்பாஸ் பக்கம் இனி தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’-மதுமிதா

பிக்பாஸ்-3 ஐம்பது நாட்களை கடந்தநிலையில், போட்டியாளர் மதுமிதா, கையில் கட்டுடன் வெளியேற்றப்பட்டார். தவறான முடிவால் பிக்பாஸ் விதிகளை மீறிவிட்டதாக கூறி அவர் வெளியேற்றப்பட்டார்.

Advertisment

m

வீட்டிற்குள் சக போட்டியாளர்களுடன் நடந்த வாக்குவாதத்தின்போது உணர்ச்சிவயப்பட்ட மதுமிதா, கத்தியால் கையை அறுத்துக்கொண்டதாக கூறப்பட்டது. என்ன நடந்தது? ஏன் கையை அறுத்துக்கொண்டார் என்பதை பிக்பாஸில் இதுவரை ஒளிப்பரப்பவில்லை.

Advertisment

ஆனால், என்ன நடந்தது என்பது குறித்து மதுமிதா தெரிவித்துள்ளார். அவர், ’’கடந்த வியாழக்கிழமை அன்று ஹலோ ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயவுசெய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன்.

இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார். இதற்கு நானும் பதில் அளித்தேன். ஹலோ ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன்.

ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நீ என்ன, எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என்று சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’’என்று தெரிவித்துள்ளார்.

bigg boss 3
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe