/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay324.jpg)
'மாஸ்டர்' படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'மாஸ்டர்' படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து, படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயாராக இருந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால், 'மாஸ்டர்' பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி 'மாஸ்டர்' படம் வெளியிடப்படும் என்று படக்குழுஅறிவித்திருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras4_19.jpg)
இந்நிலையில், 'மாஸ்டர்' படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே 'மாஸ்டர்' படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரி 'மாஸ்டர்' பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான செவன் க்ரீன் ஸ்டூடியோவின் லலித்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று (08/01/2021) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, 400 இணையதளங்கள் மற்றும் 9 கேபிள் டி.வி.க்களில் 'மாஸ்டர்' படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)