சேலத்தில் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் மசாஜ் மையங்கள், அழகு நிலையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 35 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

Advertisment

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அத்வைத ஆசிரமம் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக அழகாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு, குறிப்பிட்ட அழகுநிலையத்திற்கு சாதாரண உடையில் சென்ற காவலர்கள், அந்த அழகுநிலையத்தை கண்காணித்தனர். அந்த அழகு நிலையத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.

Advertisment

Salem

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதையடுத்து, அங்கு சோதனை நடத்தியதில் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் மூவரையும் மீட்ட காவல்துறையினர், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அந்த மையத்தில் இருந்த சேலம் மாவட்ட மேச்சேரியைச் சேர்ந்த பிரபு (35) என்பவரை கைது செய்தனர். அவர்தான் பெண்களை பாலியல் தொழிலுக்காக அழைத்து வரும் தரகராக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஒரே நேரத்தில் சேலம் நகரில் உள்ள மசாஜ் மையங்கள், அழகு நிலையங்களில் அதிரடி சோதனை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

Advertisment

அழகாபுரம், பள்ளப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த மசாஜ் மையங்கள், சந்தேகத்திற்குரிய அழகு நிலையங்களில் சோதனை நடந்தது. இந்த இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொ-ழில் செய்ததாக மசாஜ் மையம் மற்றும் அழகு நிலைய உரிமையாளர்கள், தரகர்கள் என 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி சோதனையில் பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட 35 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.