Mass demonstration demanding announcement of Bio-Agriculture Policy-Result in Farmers' Conference

Advertisment

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க கோரும் செயல் திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா போன்ற பல மாநிலங்களில் அம்மாநில அரசுகள் உயிர்ம வேளாண்மை கொள்கையை (ORGANIC FARMING POLICY) அறிவித்து, இயற்கை வழி மரபு வேளாண்மையை ஊக்குவித்து வருகின்றன. அதேபோல் தமிழ்நாடு அரசும் இம்மாநிலத்திற்கு தகுந்த உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவித்து செயல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டிற்கு ஏற்ப ஒரு உயிர்ம வேளாண்மை கொள்கை வரைவை, உருவாக்கி தமிழ்நாடு அரசுக்கு விரைவில் அனுப்பி வைப்பது, தமிழ்நாடு அரசு விரைவில் உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க வேண்டும் எனக் கோரி வரும் 2022, நவம்பர் 28 திங்கள் கிழமை காலை திருச்சியில் உழவர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இந்த ஆர்ப்பாட்டத்தை “தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்கம்” என்ற பெயரால் அனைத்து அமைப்புகளும் இணைந்து நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Mass demonstration demanding announcement of Bio-Agriculture Policy-Result in Farmers' Conference

Advertisment

இக்கூட்டத்தில் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன், மாநில தலைவர் சி. ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முருகன்குடி க.முருகன், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இரமேசு கருப்பையா, பழமலை இயற்கை வழி கூட்டமைப்பு கோட்டேரி சிவக்குமார், தாளாண்மை உழவர் இயக்கம் தா.வே.நடராசன், நம்மாழ்வார் கொள்கை பரப்பு இயக்கம் தமிழ்வேந்தன், செஞ்சோலை இயற்கை வழி வேளாண் பண்ணை சு.அருள்ஒளி, வானகம் ஆ.இரமேசு, செல்வகுமார், மாதவன், பெரியநாயகி மரபு வழி ஒருங்கிணைந்த பண்ணை ஆ.வேலாயுதம், தமிழக உழவர் முன்னணி மா.மணிமாறன், சி.பிரகாசு, இறையூர் கணேசன், சா.வெங்கடேசன், மா.கார்த்திக், க.மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.