Advertisment

 சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரம்; அரங்கேறிய கொடூரம்

Mason passed away for talking to brother girlfriend

திருச்சி மாவட்டம் மணிகண்டத்தை சேர்ந்தவர்நாகராஜ் வயது (43). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்தசதீஷ் என்பவர் காதலித்து வந்த பெண்ணிடம்(வீட்டில் அம்மா இருக்காங்களா) என கேட்டுள்ளார்என கூறப்படுகிறது. இதனை பார்த்த சதீஷின் அண்ணன் ஜெகதீசன், நாகராஜனிடம் சாமியாலபட்டி குளத்துக்கரை அருகே வைத்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஜெகதீசன் மற்றும் அவருடைய நண்பர்களான சிலம்பரசன், தீபக் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் சேர்ந்து நாகராஜனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனையடுத்து ஜெகதீசன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த மணிகண்டம் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment
trichy woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe