ஆழ்கடலில் நீந்தும் முகக் கவசங்கள்... நீர்வாழ் உயிரினங்களுக்கு உலை!  

Masks for swimming in the deep sea

கரோனாவிலிருந்து இருந்து மனித இனத்தின் உயிரைப் பாதுகாக்கபயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள் தற்பொழுது கழிவுகளாக நீர்வாழ் உயிரினங்களுக்குஉலை வைத்துள்ளது.

கரோனாபெருந்தொற்றுபரவிய ஆரம்பத்திலிருந்து முகக் கவசம் அணிவதும், கைகளை முறையாகக் கழுவுவதும்,தனிமனிதஇடைவெளியும்தான் தீர்வு எனத் தற்போது வரை அரசு சார்பிலும், மருத்துவர்கள் சார்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி மனிதர்களை கரோனாவிலிருந்துகாப்பாற்றிய கவசங்கள் கழிவுகளாக மாறி தற்போது ஆழ்கடலில் குவிந்து நீர்வாழ் உயிரினங்களின் உயிருக்குவேட்டுவைத்துள்ளது.

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஸ்கூபாடைவர் அரவிந்த் மற்றும் குழுவினர் வங்கக்கடலில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்காகச் சென்றபொழுது மனிதர்கள் பயன்படுத்தியமுகக் கவசங்கள்ஆழ்கடலில்மிதப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.அந்தக் குழு அது தொடர்பான காட்சிகளையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.மேலும் ஆழ்கடலில் தேங்கியிருக்கும் முகக் கவசங்களை அகற்றும் பணியிலும் அந்தக் குழுவினர் ஈடுபட்டனர்.

முறையாக முகக்கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை நீக்காமல் போனதே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்துகடும் கண்டனங்கள் எழும்பிவருகிறது.

corona virus Mask Puducherry sea
இதையும் படியுங்கள்
Subscribe