Advertisment

முகமூடி அணிந்து செல்போன் திருட்டு; மூவர் கைது

masked cell phone theft; Three arrested

Advertisment

கோவை மாவட்டம் சூலூரில் முகமூடி அணிந்து கொண்டு செல்போன்களை திருடிய மூன்று பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரில் வட மாநில இளைஞர்கள் தங்கி இருக்கும் அறைகளில் இரவு நேரங்களில் முகமூடியுடன் நுழையும் சில மர்ம நபர்கள், அவர்களது செல்போன்களை திருடிச் செல்வது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். சில காட்சிகளில் செல்போன், பேக் உள்ளிட்டவற்றை முகமூடி அணிந்த நபர்கள் தூக்கிச் செல்வதும் இளைஞர்கள் துரத்திச் செல்வதுமான காட்சிகள் இருந்தது. இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செல்போன்களை முகமூடி அணிந்தபடி திருடிச் சென்றது வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 15 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

police kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe