Published on 21/04/2020 | Edited on 21/04/2020
தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாளைமுதல் நாமக்கல்லில் வெளியே வருவோர் முக கவசம் அணிய வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார்.