கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தொன்மை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இது நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலமாகும்.பழமலை, முதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம் என இதற்குப் பல பெயர்கள் உள்ளன. இத்தலம் புராண பெருமைகளும், வரலாற்று தொன்மங்களும் நிறைந்து காணப்படுகிறது.

Advertisment

இத்தலத்தில் உள்ள திருச்சுற்று ஐந்து, கோபுரங்கள் ஐந்து, கொடிமரங்கள் ஐந்து, நந்திகள் ஐந்து, பஞ்ச மூர்த்திகள், பஞ்ச லிங்கங்கள், ஐந்து தேர்கள், ஐந்து மண்டபங்கள் என ஐந்தின் சிறப்பாக அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள காலபைரவர் காசியிலுள்ள பைரவரை போன்றே அமைந்துள்ளார்.

Advertisment

MASIMAHAM FESTIVAL CUDDALORE TEMPLES PEOPLES

இத்தலத்தின் முன்பாக மணிமுத்தாறு கடந்து செல்கிறது. மாசிமகத்தன்று இந்த மணிமுத்தாறில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து விருத்தகிரீஸ்வரரை வணங்கினால் காசியில் திதி கொடுத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட வீசம் புண்ணியம் அதிகமாக கிடைக்கும் என்பதால் 'காசியை விட வீசம் பெருசு' என்று போற்றப்படுகிறது.

ஆதலால் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து மணிமுக்தாறில் தமது முன்னோர்களுக்கு திதி கொடுத்து விருத்தகிரீஸ்வரரை வணங்குவர்.

Advertisment

MASIMAHAM FESTIVAL CUDDALORE TEMPLES PEOPLES

அதனால் மாசி மகத்தை ஒட்டி நேற்று (07/03/2020) இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து இரவு தங்கி அதிகாலை முதலே தமது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.