ADVERTISEMENT

தனியார் அனல் மின் நிலையம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கோரிக்கை!

06:49 PM May 30, 2020 | suthakar@nakkh…



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், ஜெயசீலன் கரிகுப்பம் கிளை செயலாளர் பரமானந்தம் ஆகியோர் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனை சந்தித்து மனு அளித்தனர். அதில், "கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பட்டை ஒன்றியம், கரிகுப்பம் கிராமத்தில் தனியார் அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள மக்கள் பயன்பாட்டிலிருந்த ஆயிரக்கணக்கன ஏக்கர் விலைநிலங்களை வாங்கி துவங்கப்பட்டது தான் இந்த அனல் மின் நிலையம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இப்பகுதி மக்களுக்கு இந்த நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி மூலம் (corporate social responsibility fund) பேரிடர் காலங்களில் உதவுவது அவசியமானது. பொதுவாகவே இந்நிறுவனம் அப்பகுதியை சுற்றி உள்ள மக்களுக்கு கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி மூலம் செய்வதாக ஒப்புக்கொண்ட பல்வேறு பணிகளை இதுவரை செய்யவில்லை என்பது தொடர் குற்றசாட்டாக உள்ளது. ஆனால் உலகம் இதுவரை கண்டிராத கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சுமார் 2 மாதகாலமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ள சூழலில் இந்த நிறுவனத்தை சுற்றி உள்ள ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு உதவுவது அவசியமாகும். ஆனால் இந்நிறுவனம் இதுவரை அத்தகைய உதவிகள் ஏதும் செய்யவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.


கொத்தட்டை, அரியகோஷ்டி, வில்லியநல்லூர் ஆகிய மூன்று ஊராட்சிகள் நிலப்பரப்பில் வருகிறது இந்த நிறுவனம். எனவே தாங்கள் உடன் தலையிட்டு IL&FS நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட மூன்று ஊராட்சிகள் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்திட வேண்டும். இப்பகுதியின் நிலங்களை, நிலத்தடி நீரை, கடற்கரையை, இயற்கை வளங்களை பயன்படுதும் இந்த நிறுவனம், மக்களுக்கு பேரிடர் காலத்தில்கூட தனது சிஎஸ்ஆர் நிதியிலிருந்து உதவி செய்யாமல் அலட்சியப்படுத்துவது அரசின் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் அவர்களுக்கு பயமின்மையை வெளிப்படுத்துகிறது. எனவே அந்த நிறுவனம் மக்களுக்கு நிவரணம் வழங்கவில்லை எனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்படும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT