ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் (படங்கள்)

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளதமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (17.03.2023) பாடி வழியாக காரில்சென்றார். அப்போது கார்ல் மார்க்ஸ் குறித்து தவறாகப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொரட்டூர் சந்திப்பில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் உடனுக்குடன் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிகழ்ச்சி முடிந்து ஆளுநர் திரும்பிச் சென்றார்.

Marxist Communist RN RAVI Show black flags
இதையும் படியுங்கள்
Subscribe