உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீர்த்து போயுள்ள வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு பதிலாக தலித் மக்களை பாதுகாக்கின்ற வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தை, ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள், ஆதி தமிழர் பேரவை, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட கட்சியினர் 300 க்கும் மேற்பட்டோர் மதுரை இரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர் இதில் காவல்துறையினருக்கும் முற்றுகையிட முயன்றவர்களுக்குமிடையே தள்ளு முள்ளும் வாக்கு வாதமும் ஏற்பட்டது . இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.