Advertisment

செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சி மனு 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடச் சென்ற பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Advertisment

marxist communist gives petition

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 16ம் தேதி இரவு மகன் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபடச் சென்ற லதா என்கிற பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர் தர்ஷன் என்கிற நடராஜா தீட்சிதரை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ராமச்சந்திரன். மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், முத்து, மாதர் சங்க சிதம்பரம் நகர தலைவர் அமுதா உள்ளிட்ட நகர் குழு மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Chidambaram Natarajar temple CHITHAMPARAM
இதையும் படியுங்கள்
Subscribe