Advertisment

'மருதா நதி வாய்க்கால்கள் சிமெண்ட் வாய்க்கால்களாக மாற்றப்படும்' - அமைச்சர் ஐ. பெரியசாமி உறுதி

'Maruta river canals will be converted into cement canals' - Minister I. Periyasamy assured

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் அய்யன்கோட்டை ஊராட்சியில் புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழா மற்றும் தேவரப்பன்பட்டியில் பால் கொள்முதல் நிலையம் திறப்பு விழா, கதிர்நாயக்கன்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், சித்தரேவில் புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. அய்யன் கோட்டையில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமன், பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஹேமலதா மணிகண்டன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தர் ராஜன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் புதிய நியாயவிலைக்கடையைத்திறந்து வைத்துவிட்டு பொதுமக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சிதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது. ஒரு சில பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆத்தூர் தொகுதியில் திமுக ஆட்சியின் போது 12 வருடங்களுக்கு முன்பு தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைத்ததோ அதுபோல தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும் அதற்கான நடவடிக்கையும் நான் எடுத்து வருகிறேன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில் தனித்தன்மை வாய்ந்ததுதேவரப்பன்பட்டி ஊராட்சி,காரணம்இந்த ஊராட்சியில் மக்கள் முன்னேற்றத்திற்கான நலத்திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் விவசாய தொழில், கால்நடை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்காக பால் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதை கால்நடை விவசாயிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பு மருதா நதிக்கு செல்ல வேண்டிய பாதை கரடு மேடாக இருந்தது. இப்போது சிறப்பான சாலை வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல மருதா நதி நீர் வரத்து வாய்க்கால்கள், வடக்கு வாய்க்கால் மற்றும் தெற்கு வாய்க்கால்கள் சிமெண்ட் வாய்க்கால்களாக மாற்றப்படும். இது தவிர ஆத்தூர் தொகுதியில் நீர்த்தேக்கங்கள் மற்றும் விவசாய குளங்களுக்கு வரும் நீர் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் சிமெண்ட் வாய்க்காலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

water
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe