Advertisment

‘திருமணமான பெண்களுக்குப் பணி மறுப்பு?’ - சர்ச்சையில் சிக்கிய தனியார் ஆலை!

Married women refusal to work The plant caught in controversy again

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள சுங்குவார்சத்திரம் என்ற பகுதியில் பாக்ஸ்கான் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத்தொழிற்சாலையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Advertisment

கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதுார் பாக்ஸ்கான் ஆலையின் தங்கும் விடுதில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக 17 மணி நேரம் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதைய மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisment

இந்நிலையில் இந்த ஆலையின் ஆட்சேர்ப்பின் போது திருமணமான பெண்களுக்கு பணி மறுக்கப்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பாக்ஸ்கான் ஆலை மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

labours sriperumputhur factory kanchipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe