Advertisment

19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே முதல் மனைவி இருக்கும் போதே, கல்லூரி மாணவி ஒருவரை 2 வது திருமணம் செய்த நபரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சிவமணி. இவருக்கு முதல் திருமணம் நடந்து 12ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக சொல்லப்படுகிறது. மேலும் முதல் மனைவிக்கும், சிவமணிக்கும் 10வயதில் ஒரு மகன் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்பாக பேசியுள்ளனர்.

Advertisment

incident

பின்பு நாளடைவில் இவர்களது பழக்கம் மிக நெருக்கமாக பல இடங்களுக்கு தனிமையில் சென்றுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி சினேகா காணாமல் போயுள்ளார். இதனால் பதறிப்போன சினேகாவின் பெற்றோர் அருகில்உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில், சிவமணிக்கும், சினேகாவிற்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேளாங்கன்னியில் வசித்து வருவதை கண்டுபிடித்தனர். பின்பு இந்த தகவல் தெரிந்ததும் வேளாங்கண்ணி சென்ற போலீஸார் சிவமணியை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திருமணம் ஆன நபருடன் இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

issues family college girl Young woman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe