Advertisment

காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

married couple took refuge police for protection

Advertisment

காதல் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகள் பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டுகரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துர்கா தேவி (21). இவரது எதிர் வீட்டில் உள்ள அமீர் பாபு என்பவரின் மகன் ஏஹயா பாட்ஷா என்பவரை சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இரண்டு பேரும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏஹயா பாட்ஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம்சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் நண்பர்கள் உதவியுடன் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோரிடத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்மனு வழங்க புதுமணத்தம்பதிகளாக மாலையும்கழுத்துமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe