
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது மாத்தூர் திருக்கை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் விஜய் என்ற டிப்ளமோ பட்டம் படித்துள்ள இவருக்கும், பண்ருட்டியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான கவிதா(23) என்பவருக்கும் இரு வீட்டார்களும் முறைப்படி பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். அதன்படி இருவருக்கும் நேற்று (23.05.2021) செஞ்சி அருகில் உள்ள அப்பம்பட்டு என்ற ஊரில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணத்திற்கு வருகைதந்த உறவினர்கள் மணமக்களுக்கு அன்பளிப்பாக கொடுத்த 5,000 ரூபாய் மொய் பணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின்வேண்டுகோளின்படி முதல்வர் கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவது என்று மணமக்கள் இருவரும் முடிவுசெய்தனர். அதனையொட்டி திருமணம் முடிந்த அந்த மணக்கோலத்திலேயே செஞ்சி பயணியர் விடுதியில் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை சந்தித்து, தங்கள் திருமண அன்பளிப்பாக கிடைத்த மொய் பணம் 5000 ரூபாயை முதல்வர் நிவாரண நிதியில் சேர்த்துவிடுமாறு அவரிடம் வழங்கினார்கள். நிதியை பெற்றுக்கொண்ட அமைச்சர் மஸ்தான், மணமக்களை வாழ்த்தி அவர்களுக்குப் பரிசு வழங்கி ஆசீர்வதித்தார். திருமண தம்பதிகள் தங்கள் திருமணத்திற்கு கிடைத்த மொய் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)