
சென்னையில் திருமணமான நான்கே நாட்களில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூரில் உள்ள அக்ரஹார எல்லையம்மன் தெருவைச்சேர்ந்த சந்தியா-ராஜா என்பவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்திருந்தது. திருமணத்தில் சந்தியாவிற்கு விருப்பமில்லை என்று கூறப்படும் நிலையில் கடந்த 7ஆம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மணப்பெண்ணின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆனநான்கேநாட்களில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us