Advertisment

காதல் திருமணம் - கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

marriage issue woman Father arrested for making threats

Advertisment

திருச்சி மாவட்டம், தொட்டியம் அழகுநாச்சியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவரது மகன் பிரசாந்த்(21). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(45) என்பவரின் 20 வயது மகளைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

பெண்ணின் தந்தை இந்தத்திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால், கடந்த 15ஆம் தேதி பிரசாந்த்தை போனில் மிரட்டி உள்ளார். அதுமட்டுமின்றி பிரசாந்தின் வீட்டிற்கே சென்றும் மிரட்டியுள்ளார். அதோடு கடந்த 17ஆம் தேதி காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பிரசாந்தின் தந்தை சரவணனை, அசோக்குமார் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் இணைந்து, வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசியதோடு கொலை செய்துவிடுவதாகவும்மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சரவணன் தொட்டியம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe