திருமணம் செய்வதாக மோசடி செய்த வழக்கில் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அசன் மெளலானாவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஜே.எம் ஆரூணின் மகன் அசன் மௌலானா, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக உள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசம் செய்து விட்டதாக அசன் மீது பார்வதி பர்வீன் பாத்திமா என்பவர் சென்னை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையித்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அசன் மீது சென்னை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததால் முன் ஜாமின் கோரி அசன் வழக்கு தொடர்ந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/photo 100 _0.jpg)
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீசஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் பாத்திமா தரப்பில் அசனுக்கு முன் ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார் அளிக்கபட்டுள்ளதாகவும், இந்த புகார் திட்டமிட்டு அரசியல் ரீதியாக பலி வாங்க அளித்த புகார் என்பதால் அவர்களது கோரிக்கையை நிராகரித்து முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது புகார்தாரர் பாத்திமா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அசன் மிரட்டல் விடுத்தது தொடர்பான ஆதாரங்கள் காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து முன் ஜாமீன் தொடர்பாக காவல்துறை பதில் அளிக்கவும், பாத்திமா கொடுத்த ஆதாரங்களை தாக்கல் செய்யவும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Follow Us