Advertisment

திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண் செய்த காரியம்...விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகள் மோனிகா வயது(20). மோனிகாவிற்கும் ஆந்திராவைச் சேர்ந்த மகேஷ் உறவினரின் மகனை திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் சேர்ந்து முடிவு செய்தனர். அதன்படி திருமணம் இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் தன்னுடைய தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிய மோனிகா வீட்டிலிருந்து சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் மோனிகா வீட்டிற்கு வரவில்லை. இதனால் மோனிகாவின் பெற்றோர் அவரது மொபைல்க்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மோனிகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மகேஷ் மோனிகாவின் நண்பர்களுக்கும் போன் செய்தும் , வீட்டிற்கும் சென்று விசாரித்தனர்.

Advertisment

incident

மோனிகாவை பற்றி எந்த தகவலும் மகேஷ் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக பெற்றோர்கள் பதறி போய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், விசாரணையில் தான் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் நேற்று முன்தினம் காலை மோனிகா தனது தந்தை மகேஷுக்கு போன் செய்து தான் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்த பிறகு தனது பெற்றோரால் ஆபத்து என்று மோனிகா போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்போது விசாரணையில் மோனிகா கார்த்திக் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும் , இதற்கு தனது தந்தை மகேஷ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் மனோஜ் உடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது தெரியவந்தது. பின்னர் மோனிகாவின் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

Advertisment
complaint police parents Love marriage incident lovers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe