Advertisment

இரவு 10 முதல் காலை 6 மணி வரை மார்கெட் இயங்கும் - ஈரோடு கலெக்டர்

உலகை அறிவியல் ரீதியாகக் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடத்தி வந்த மனித சமூகத்திற்கு உலை வைத்துள்ளது கரோனா வைரஸ். இதிலிருந்து மீள்வதற்காக மருத்துவ போர் நடத்தி வருகிறது உலகத்தின் மருத்து இதயம். இதில் இந்தியா தனது மொத்த அரசின் பலத்தையும் செலுத்துகிறது. அதே போல் நமது தமிழகமும்.

Advertisment

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான். இதன் தொடர்ச்சி தான் ஈரோடு. ஈரோட்டிற்கு தாய்லாந்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 7 பேர் தொழுகை நடத்துவதற்காகக் கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டைக்குச் சென்று அவர்கள் தொழுகை மற்றும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். அதில் பங்கு பெற்றவர்கள் உட்பட பலருக்கும் இந்த வைரஸ் தொற்று இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. அதில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியானது.

Advertisment

Market Running - Erode Collector

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் 24.03.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர் ஈரோட்டில் பிரதானமாக இயங்கும் நேதாஜி தினசரி மார்க்கெட்டுக்குச் சென்றார்கள். அங்கு வியாபாரிகள் ஒன்று பேசி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்கள். அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மார்க்கெட் இயங்க அனுமதி கொடுத்துள்ளார்கள். வெளியூரிலிருந்து வருகிற காய்கறிகளை வாங்கி இந்த கடைகளில் வைத்து விற்பனை செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.

அதேசமயம் பொதுமக்கள் இந்த மார்க்கெட்டுக்கு வந்துதான் காய்கறிகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குடியிருக்கிற பகுதியிலேயே இருக்கிற மளிகைக் கடைகள் காலையில் சிறிது நேரம் திறந்திருக்கும் அந்தக் கடைகளில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் மார்க்கெட்டுக்கு வந்து கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

collector Market Erode corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe