ஆசியாவிலேயே மிக நீளமானதும், உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையாகவும் உள்ளது சென்னையில் உள்ள மெரினா கடற்கரை. சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் சென்று பார்க்கக்கூடிய சென்னையின் அடையாளமான மெரினா அதற்கென சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கடற்கரையில் குவியும் புறாக்களை காண்பதற்காகவே பலர் மெரினாவிற்கு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் சுற்றித்திரியும் புறாக்களுக்கு ஊடே விளையாடுவதும், அவற்றை ரசிப்பதும் அதிகாலையில் புத்துணர்வு தருவதாக பலரும் சிலிர்க்கின்றனர்.
மெய்சிலிர்க்க வைக்கும் மெரினா பறவைகள்..!(படங்கள்)
Advertisment
Advertisment