Skip to main content

வெறிச்சோடிய மெரினா கடற்கரை! (படங்கள்) 

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

 

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிற சூழலில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அரசு பிறப்பித்துள்ளது. கூட்டங்கள் கூடுதல், வெளியில் முகக்கவசம் இன்றி நடமாடுதல் போன்ற சில நடைமுறைகளை தடுக்கும் விதமாக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில், தொற்றைக் கருத்தில் கொண்டு அரசு விடுமுறை நாட்களிலும் மெரினா கடற்கரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தெலுங்கு மற்றும் கன்னட வருடப் பிறப்பு நாளான இன்று அரசு விடுமுறை என்பதால், கடற்கரை மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு (படங்கள்)

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

மாமேதை கார்ல் மார்க்ஸ்-ன் 140வது நினைவு தினம் இன்று (14.03.2023) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கார்ல் மார்க்ஸ் படத்திற்கு சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன், ஜி செல்வா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். 

 

 

Next Story

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார் (படங்கள்)

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று (03.02.2023) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.