கரோனா பரவல் காரணமாக பொங்கல் விடுமுறைகளான ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

Advertisment

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் அதிக அளவில் மக்கள் கூடி கொண்டாடுவது வழக்கம். ஆனால், தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக மெரினாவின் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாக காணும் பொங்கலான இன்று மெரினா கடற்கரை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.