Advertisment

மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது - ஐகோர்ட்

merina

மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வலியிறுத்தியுள்ளது.

Advertisment

மெரினா கடற்கரை பொது கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதாக கூறி சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார்.

Advertisment

அந்த மனுவில் " கடந்த 4 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை அதன் பொலிவை இழந்து வருகிறது..நீச்சல் குளம் அருகில் நரிக்குறவர்கள் தங்கியுள்ளனர்.அப்பகுதியில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.அதனால் நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் குடியமர்த்துவதுடன், இனிமேல் மெரினா கடற்கரையில் எவரும் வசிக்காத நிலையை ஏற்படுத்தி கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மணிக்குமார், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையில் நரிக்குறவர்கள் தங்கியிருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாதபோது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

keep it clean - the court Beach Marina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe