Advertisment

பெண்களிடையே உடற்தகுதியை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான்

Marathon competition to promote fitness among women

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே உடற்தகுதியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் ஐந்து கி.மீ. மாரத்தான் தொடர் ஓட்டம் நேற்று (12.3.2023)நடைபெற்றது. ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தானில் பல்வேறு வயது பிரிவில் 1,900 பெண்கள் கலந்துகொண்டனர். 18 - 25, 26 - 40 மற்றும் 41 வயதுக்கு மேற்பட்ட மூன்று வயதுபிரிவுகளில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

Advertisment

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ஸ்ரீமதி, காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசாமி, அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மகாராஷ்டிரா வங்கி மேலாளர் ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர்களுக்கு தங்க நாணயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்தோடு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் டீ-சர்ட், சான்றிதழ்களுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Advertisment

Chennai womensday
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe