Advertisment

திருச்சியில் மீட்கப்பட்ட மராட்டிய மாநில சிறுவன்! 

Maratha boy rescued in Trichy

Advertisment

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காலை, 2 மணி நேரத்துக்கும் மேலாக 14 வயது சிறுவன் சுற்றித்திரிந்து உள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்த ரயில்வே போலீசார் சிறுவன் மராட்டிய மொழியில் பேசியதால் காவலர்களின் உதவியோடு அச்சிறுவனின் விவரம் கேட்டுள்ளனர்.

Advertisment

அதில் அவருடைய பெயர் சங்கர் துக்காராம் ஷிண்டே என்பதும், மராட்டிய மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், துல்கர் என்பவரின் மகன் என்பது உள்ளிட்ட தகவல்களை கொடுத்துள்ளார். அவருடைய விலாசம் மற்றும் தொடர்பு எண்கள் எதுவும் அவருக்கு முழுமையாகத் தெரியாததால் ரயில்வே பாதுகாப்பு படையினர் மராட்டிய மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். எனவே தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் ரயில்வே ஜங்ஷனில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஊழியர்களிடம் தற்போது சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Child Care railway station trichy
இதையும் படியுங்கள்
Subscribe