ADVERTISEMENT

"பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளன"- ப.சிதம்பரம்!

09:09 PM Aug 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் முதன்முறையாக பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், சுமார் மூன்று மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசின் 2021-22 ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் படித்தேன். ஆறு மாதங்களாக நடைமுறையில் உள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அவசியமான சில திருத்தங்களைச் செய்து எஞ்சியுள்ள 6 மாதங்களுக்கு அறிக்கையை நிதி அமைச்சர் தந்திருக்கிறார். இது சிக்கலான, சிரமமான பணி.

நிதி நிலை அறிக்கையில் தி.மு.கழகத்தின் சமுதாய நோக்கு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது, இது பாராட்டுக்குரியது.தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன். பெட்ரோல் மீதான வரியில் ரூபாய் 3- ஐக் குறைத்திருப்பது ஓர் உதாரணம்.

பல மக்கள் நலத்திட்டங்கள் புத்துயிர் பெற்றிருப்பதையும் வரவேற்கிறேன். பெருந்தொற்றின் தாக்கத்தில் மக்கள் இன்னும் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அளித்திருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் தரவிருக்கும் 2022- 23 ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் பல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT