தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் அறிவித்ததோடு, அந்தத் திட்டத்தைத் தொடங்கியும் வைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் இப்படி பொங்கல் பரிசு கொடுப்பது அரசியலில் ஆதாயம் தேடுவதற்குதான் என சில அரசியல் வட்டாரத்தினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளது பலருக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இனி வருங்காலங்களில் அறிவிக்கப்படும் புதியதிட்டங்கள் பலருக்கு வயிற்று வலியை உண்டாக்கும்" என்று எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.