Many more private hospitals for corona treatment-Minister vijaybaskar

சென்னை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்தபின் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

Advertisment

Advertisment

கிண்டி கிங் பரிசோதனை மையத்தில்500 படுக்கைகள் தயாராக உள்ளன. அதேபோல் துறைமுகம் வளாகமருத்துவமனையில் 300 படுக்கைகளும்,எழும்பூர் கண் மருத்துவமனையில் 500 படுக்கைகளும்உள்ளன.கிங் பரிசோதனை மையத்தில்கரோனா சிகிச்சைக்காக மேலும் 80 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.88 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவிற்குசிகிச்சை அளிக்க இன்னும் பல தனியார் மருத்துவமனைகள் இணைய உள்ளன. அவுட்சோர்சிங்முறையில் மருத்துவப் பணியாளர்களை நியமித்து வருகிறோம் என தெரிவித்தார்.