Advertisment

“சில முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ரவுடிபேபி சூர்யா பின்னாடி இருக்கிறார்கள்” - பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்!

சுப்புலட்சுமி என்கிற ரவுடிபேபி சூர்யாவையும், சிக்கந்தர் என்கிற சிக்காவையும் பாலியல் வழக்கில் கைதுசெய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும் பொதுமக்களும் சேர்ந்து கமிஷனர் அலுவலகம் முன் திரண்டனர். ஆதாரத்துடன் வழக்குப் பதிவுசெய்து வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கை உடனடியாக எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெண் ஒருவர் கூறியதாவது, “ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தேன்.

Advertisment

நேரடியாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்குச் சென்று ஆட்சியரிடம் புகார் மனுவைக் கொடுத்தேன். அங்கிருந்து இந்த வழக்கைத் தொடர அனுமதி வழங்கினர். அதன் பின்னர் மேடவாக்கம் மவுண்ட் டிசிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர் ஏசிக்கு அனுப்பி, சைபர் கிரைம்ல விசாரிக்கச் சொன்னார்கள். சைபர் கிரைம்ல எஸ்.ஐ. பாலசுப்பிரமணியிடம் என்னிடம் இருக்கும் ஆதாரத்தைக் கொடுத்தேன். அனைத்து ஆதாரங்களையும் வாங்கிய அவர், எஃப்.ஐ.ஆர். பதிந்தாரா இல்லையா என்றே தெரியவில்லை. வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என கேட்க அவரை தொடர்புகொண்டால் என்னையே மிரட்டுகிறார். 14 வருடம் பணியில் இருக்கிறேன். எங்க வேணாலும் சென்று என்ன வேனாலும் செய்துகொள்ளுங்கள் என கூறுகிறார். இப்ப நான் தொடர்ந்த வழக்குக்குப் பதில் தெரியணும்.ரவுடிபேபி சுப்புலட்சுமி நடிகையோ, யூடியுபரோ கிடையாது.

Advertisment

அவருடைய முழு வருமானமும் பெண்களைப் பாலியல் தொழிலுக்கு அமைத்துக்கொடுத்து டாலர்களில் சம்பாதித்துவருகிறார். சில கட்சிக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் அவர் பின்னாடி இருக்கிறார்கள். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை சைபர் கிரைம்ல கேட்டாங்கன்னா எல்லா ஆதாரத்தையும் கொடுப்பேன். மேலும், அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்மணி என்னை ஃபோனில் மிரட்டுகிறார். அதனால் நீங்க சுப்புலட்சிமியை கைது செய்து விசாரணை செய்தால் எல்லா உண்மையும் வெளியேவரும். அதேபோல் அவருக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என எல்லாம் வெட்ட வெளிப்படையாக தெரியவரும்” என தெரிவித்தார்.

Chennai Surya TikTok
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe